நீங்காத நினைவுகள்.
தமிழருவி இசைவிழாப் போட்டி 1993
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மத்தியில் கலை இலக்கிய கலாச்சார அரசியல் முன்னெடுப்புக்களை நோக்காகக்கொண்டு மாத, இருமாத காலாண்டுச் சஞ்சிகைகள் பல தோன்றி பொருளாதார அரக்கனுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் தம்மை முடக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் செய்திப் பத்திரிகை ஒன்றின் அவசியத்தையுணர்ந்து எசன் நகரில் ஊற்றெடுத்த தமிழருவி இன்று ஜெர்மனியில் மட்டுமல்லாது ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரந்தோடி ஓராண்டை நிறைவு செய்திருப்பது பாராட்டிற்குரிய சாதனைதான்.
ஈழத்தமிழர்களிற்காக ஊற்றெடுத்த தமிழருவி ஈழத்தின் கலைஞர்களையும் மறக்காமல் தன் ஓராண்டில் கௌரவித்தது சாதனையின் இரண்டாம் படியே.
ஈழவிடுதலைக்கு இன்னுயிர் உவந்தளித்த போராளிகளை நினைவுகூர்ந்து மௌன அஞ்சலியுடன் ஆண்டுவிழா ஆரமபமாயிற்று. மங்கள வாத்தியக் கலைஞர் கணேஸ் குழுவினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனக் கௌரவிப்புக்கள்...
பிரதம விருந்தினராக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு இரா.ந.வீரப்பன் கலந்துகொண்டார்.
பிரபல எழுத்தாளரும் பூவரசு ஆசிரியருமான திரு இந்துமகேஷ் விழாத் தலைமையேற்று சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பனவற்றின் பணிபற்றி உரையாற்றினார்.
சிறப்புரை வழங்கிய ஈழநாடு அசிரியர் திரு குகநாதன் தமிழருவியின் சிறப்பையும் அதன் பணியையும் மெச்சியதும் சகோதரப் பத்திரிக்கையை சமனாக நோக்கியதும் பத்திரிகைத் துறையினருக்கு இருக்கவேண்டிய பரந்தநோக்கை வெளிப்படுத்தியது மெச்சவேண்டிய ஒன்றே.
விக்கினேஸ்வரா நடனக் கலாமன்ற நர்த்தகிகள் சிறப்பான நாட்டியக் கலையை வழங்க கமலபாதம் - தாஸ் குழுவினர் தாமும் சளைத்தவர்கள் அல்ல எனத் தமது திறனை வெளிப்படுத்தி சபையோரின் கரகோஷங்களைப்
பெற்றுக்கொண்டனர். திரை இசை நடனங்களும் வந்துபோயின.
விழாவில் பிரதான நிகழ்ச்சியான இசைப் போட்டிக்கு இசைக்குழுக்கள் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டன. நடுவர்களாகக் கடமையாற்றிய பார்வையாளர்களில் பெரும் பகுதியினரான எசன் நகரமக்களாகிய தமிழருவியின் வாசகர்கள் தம்மூர்க் கலைஞர்கள் என்ற பெயரில் ஒருபக்கம் சாராது ஆறு இசைக் குழுக்களினதும் திறனாய்ந்து பாடல்களினதும் பாடகர்களினதும் தரமாய்ந்து தீர்ப்பு வழங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும்.
பங்குபற்றிய னைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்: தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிவரும் தமிழருவி தமிழ் இசைக் கலைஞர்களுக்கு வழங்கியுள்ள இந்தக் கௌரவம் காலந்தோறும் நினைவு கூரத்தக்கது என்பதில் சந்தேகமில்லை.
( பிரசுரம்: பூவரசு கார்த்திகை மார்கழி 1993)

நல்லமனம் வாழ்க!தமிழவேள் திரு நயினை விஜயன்
1979 முதல் எமது தாய்மொழிக்காகவும், கலைவளர்ச்சிக்காகவும் இன்றுவரை அயராது உழைத்துக்கொன்டிருப்பவர்.
20 ஆண்டுகளாக எசன் நகரில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நுண்கலைகல்லூரியை நடாத்தி வருபவர்.
எமது பாரம்பரியக் கலைகளை 3 தலைமுறைக் குழந்தைகளுக்கு பதியமிட்டுள்ளார். இவரது சேவையைப் பாராட்டி தென்னாபிரிக்கத் தமிழர்களும், பெங்களூர் டாக்டர். அம்பெத்கார் பல்கலைகழக முதல்வரும்
பாராட்டி வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உ.த.ப.இயக்க தலைவர் பேராசிரியர் இர.ந.வீரப்பன் அவர்களால் தமிழவேள் என சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழிசைத் துறைக்கு யெர்மனியில் காத்திர்மான பங்களிப்பைசெய்துள்ளார் இவரது முயற்சிகளுக்கு ஆசிரியையான திருமதி.சசிகலா விஜயன் உற்ற துணை என்பதை என்றும் நினைவில் கொள்வார்.
இவர் ஒரு செயல்பாட்டு வீரர். துணிவும் தன்னம்பிக்கையும் கொண்டவர் கம்பீரமான இவருடைய நடவடிக்கைகள் வியந்து பார்த்து மனம் கொள்ளத் தக்கவை.
தனது நகரத்தில் நடைபெறும் வெளிநாட்டவர் வாரத்தில் தமிழரின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளை பல்கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்காற்றச் செய்பவர்.
ஐந்து வருடங்களாக தமிழருவியின் இசைத்திருவிழாவை நடத்தி சிறந்த ஆண் பாடகர்,சிறந்து பெண் பாடகர்,
சிறந்த ஜோடிப் பாடகர்களைத் தெரிவு செய்தும் சிறந்த இசைக்குழுவையும் இரசிகர்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து பரிசளித்து கௌரவித்தவர்.
தொடரும் அவரது தமிழ்த்தொண்டும் கலைத்தொண்டும் இனிதே தொடர மனதார வாழ்த்துகிறோம்.
-இந்துமகேஷ்
Keine Kommentare:
Kommentar veröffentlichen