Dienstag, 12. Mai 2020

தெய்வம்

1967 மார்கழி 15 இல் வெளியான மல்லிகை இதழில்
இடம்பெற்றிருந்த எனது கவிதை!

(அப்போது எனது புனைபெயர் - புங்கையூர் மகேசன்)
























தெய்வம்
- புங்கையூர்  மகேசன்

தெய்வமொன் றுண்டென்ற செய்தி கேட்டுத்
தெய்வமதைக் காணவெனத் திண்மை யுற்றேன்
பொய்யான வார்த்தையிது புரியா தேனோ
புகுகின்றாய் வீண்வேலை யென்றே சொன்ன
மெய்யன்பு கொண்டிட்ட நண்பர் வார்த்தை
விலக்கியபின் முனைந்திட்டேன் தெய்வம் காண
வெய்துறுதல் வேண்டுமெனும் உண்மை நெஞ்சில்
வேதனையை மூட்டியது விரைதலுற்றேன்

இப்புவியில் எங்கெங்கோ தேடி நின்றும்
இல்லையொரு தெய்வமென எண்ணி நெஞ்சில்
செப்புவழு வுற்றேனோ வென்றே தேரச்
சேயானேன் தாயவளைத் தேடிநின்று
இப்போது சொல்கின்றேன் அன்னா யிங்கு
இல்லையொரு தெய்வமெனச் செப்பும் வேளை
அப்போது அன்னையவள் புன்னகைத் தாள்
அன்ப தே தெய்வமென உற்றுணர்ந்தேன்